குமாரபாளையத்தில் சண்டையை தட்டிக்கேட்டவருக்கு கத்திக்குத்து

குமாரபாளையத்தில் சண்டையை தட்டிக்கேட்டவருக்கு கத்திக்குத்து
X

பைல் படம்.

Today Crime News in Tamil -குமாரபாளையத்தில் சண்டையை தட்டி கேட்டவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டதுடன் குற்றவாளி தலைமறைவானார்.

Today Crime News in Tamil-குமாரபாளையம் அருகே ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் அருண், 31. கூலித்தொழிலாளி. இவரது வீட்டின் பின்னால் உள்ள சிவராஜ், 45, வீட்டிற்கு நேற்றுமுன்தினம் மாலை 01:30 மணியளவில் அருண் சென்ற போது,அங்கு சிவராஜுடன், கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்த தங்கவேல், 65, என்பவர் சண்டை போட்டுகொண்டு இருந்துள்ளார்.

இதனை அருண் தட்டி கேட்க, ஆத்திரமடைந்த தங்கவேல் கட்டையால் அருண் தலையில் தாக்கியதுடன், கத்தியால் வயிற்றில் கீரியதாக தெரிகிறது. இதனால் படுகாயமடைந்த அருணை அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஈரோடு ஜி.ஹெச்.ல் சேர்த்தனர். தங்கவேல் தலைமறைவாகியுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலுவை தேடி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!