கபசுர குடிநீர் வழங்கிய மக்கள் நீதி மய்யத்தினர்

கபசுர குடிநீர் வழங்கிய மக்கள் நீதி மய்யத்தினர்
X

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

குமாரபாளையம் பகுதியில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பலருக்கு இருமல், சளி. காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கும் நிலை அதிகரித்து வருகிறது..

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில், மாவட்ட அமைப்பாளர் சித்ரா தலைமையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.பஸ் ஸ்டாண்ட், வாரச்சந்தை, பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர், காவேரி நகர், சுந்தரம் நகர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் மல்லிகா, விமலா, விஜி உள்பட பலர் பங்கேற்றனர்.

கபசுரக்குடி நீர்: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதாகக் கூறப்படும் கபசுரக் குடிநீர் சமீபமாக அதிக அளவில் தயாரிக்கப்பட்டு சித்த மருத்துவக் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது.

சென்னை திருவான்மியூரில் உள்ள இம்காப்ஸ் எனப்படும் இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து செய் நிலையம் மற்றும் பண்டக சாலைகளில் கபசுர குடிநீர் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்த கபசுர குடிநீர் ஆடாதொடை, அக்ரஹாரம், கற்பூரவள்ளி, திப்பிலி உள்ளிட்ட 15 மூலிகைகளால் தயாரிக்கப்பட்டு வருவதாக இம்ப்காப்ஸ் செயலாளர் தெரிவித்துள்ளார். இது கொரோனா நோய் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் மருந்து மட்டுமே என்றும் கூறியுள்ளார்.

இந்த கபசுரக் குடிநீர 40 முதல் 50 மிலிவரை பெரியவர்கள் எடுத்துக் கொள்ளலாம். காலையில் வெறும் வயிறில் எடுத்துக் கொள்ளலாம், காய்ச்சல், உள்ளிட்ட நோய் குறிகுணங்கள் அதிகமாக இருந்தால் மாலை நேரத்திலும் ஒருவேளை எடுத்துக் கொள்ளலாம். இது போல ஒருவாரம் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறியவர்களுக்கும் 15 முதல் 20 மிலி வரை கொடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

Tags

Next Story
ai in future agriculture