அக். 31க்குள் சொத்துவரி செலுத்த வேண்டும் : நகராட்சி ஆணையர் தகவல்

பைல் படம்
அக். 31க்குள் சொத்துவரி செலுத்த வேண்டுமென குமாரபாளையம் நகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து குமாரபாளையம் நகராட்சி ஆணையர் சரவணன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
குமாரபாளையம் நகராட்சி சொத்து வரி விதிப்பாளர்கள் 2023, 2024ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டிற்கு சொத்து வரியினை செலுத்துவதற்கான கால அவகாசம் செப். 30, 2023, உடன் நிறைவு பெற்றது. மேற்படி சொத்துவரியினை செலுத்த தவறியவர்களுக்கு மாதம் தோறும் ஒரு சதவீதம் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.
எனவே முதல் அரையாண்டு சொத்துவரியினை நகராட்சியில் உடன் செலுத்தி ஒரு சதவீத அபராதத்தை தவிர்க்குமாறு தெரிவிக்கபப்டுகிறது. மேலும் இரண்டாம் அரையாண்டு சொத்துவரியினை அக். 31க்குள் செலுத்தி 5 சதவீத சலுகை பெற்றுக்கொள்ளலாம். எனவே சொத்துவரி விதிப்பாளர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி 5 சதவீத சலுகையினை பெற்றுகொள்ளலாம். இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu