நிதி நிறுவன தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட 3 வயது குழந்தையின் தாய்!

நிதி நிறுவன  தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட 3 வயது குழந்தையின் தாய்!
X
குமாரபாளையத்தில் நிதி நிறுவன தொல்லையால் 3 வயது குழந்தையின் தாய் தற்கொலை செய்துகொண்டார்.

நிதி நிறுவன தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட 3 வயது குழந்தையின் தாய்

குமாரபாளையத்தில் நிதி நிறுவன தொல்லையால் 3 வயது குழந்தையின் தாய் தற்கொலை செய்துகொண்டார்.

குமாரபாளையம் திருவள்ளுவர் நகரில் வசித்து வந்தவர் கார்த்திகா, 21, ராகுல், 27. ராகுல் டூவீலர் மெக்கானிக் வேலை செய்து வந்தார். கார்த்திகா 3 வயதான குழந்தை தர்ஷினியுடன் வீட்டில் இருந்தார். இவரது தாயார் ராணி, 40. இவர் தன் கணவர் இறந்ததால் தம்மண்ணன் வீதியில் உள்ள இளைய மகள் வீட்டில் இருந்து வந்தார். சில நாட்கள் முன்பு கணவன், மனைவி இருவரும், தாயார் இருந்த வீட்டிற்கு குழந்தையுடன் வந்து, நிதி நிறுவனங்களில் கடன் பெற்றதால், செலுத்த முடியாத நிலை.

அதனால் அவர்கள் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கிறார்கள் என்று கார்த்திகா கூறினார். ஒரு மாதம் தங்கி விட்டு, ராகுலின் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டனர். அங்கும் வந்து நிதி நிறுவனத்தார் தொந்தரவு கொடுப்பதாக கார்த்திகா, ராணி வசம் கூறியுள்ளார். நேற்று மாலை 03:30 மணியளவில் கார்த்திகா, வீட்டின் பூஜை அறையில் உள்ள விட்டத்தில் தூக்கு மாட்டி தொங்கிக்கொண்டு இருப்பதாக ராணி வசம், ராகுல் கூற, ராணி மற்றும் உறவினர்கள் நேரில் சென்று, கீழே இறக்கி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது, அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார்.

இது குறித்து ராணி குமாரபாளையம் போலீசில் புகார் செய்து, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தார் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்தார். இதன்படி குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!