/* */

ஒளிரும் விளக்குகள் அமைத்த நெடுஞ்சாலைத் துறையினர்

குமாரபாளையத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் ஒளிரும் விளக்குகள் அமைத்தனர்

HIGHLIGHTS

ஒளிரும் விளக்குகள் அமைத்த  நெடுஞ்சாலைத் துறையினர்
X

குமாரபாளையத்தில் சாலையின் நடுவில் ஒளிர்ப்பான்களை அமைத்த நெடுஞ்சாலை துறையினர்

குமாரபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் ஒளிரும் விளக்குகள் அமைத்தனர்.

குமாரபாளையம் சேலம் சாலையில் போலீஸ் ஸ்டேஷன் முதல் கத்தேரி பிரிவு சாலை வரை 2 கி.மீ. தூரத்திற்கு சாலையின் நடுவில் டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் ஸ்டேஷன், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் பிரிவு, குளத்துகாடு பாலம், பவர் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ள டிவைடர்களின் முகப்பில் ஒளிரும் விளக்குகள் இல்லாததால், இரவில் வரும் வாகனங்கள் இந்த டிவைடர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். விபத்துகளை தடுத்திடும் வகையில் இந்த டிவைடர்களில் ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் சேலம் சாலையில் கத்தேரி பிரிவு முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை டிவைடர் வைக்கப்பட்டுள்ளது. இவைகளில் ஒளிரும் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் டிவைடர் மீது வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்கும் வகையில் டிவைடர்களில் ஒளிரும் விளக்குகள் அமைத்திட வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேலம் சாலை டிவைடர்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒளிரும் விளக்குகள் பொருத்தும் பணி துவங்கியது.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் சாலையில் உள்ள டிவைடர்களில் விபத்துக்களை தடுக்க ஒளிரும் விளக்குகள், முக்கிய சாலை சந்திப்புகளில் ஒளிரும் தகடுகள் மற்றும் பிரிவு சாலைகளில் பதிக்கும் வகையிலான ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.




Updated On: 16 Jun 2023 7:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  4. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  5. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  8. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  9. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...