வழி விடாமல் நிறுத்திய அரசு பேருந்து ஓட்டுனரால் இதர பேருந்துகள் செல்ல அவதி!
படவிளக்கம் : குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட்டில் மையப்பகுதியில் நிறுத்தி வைக்கபட்ட அரசு டவுன் பேருந்தால், இதர பேருந்துகள் போக முடியாத நிலை ஏற்பட்டது.
வழி விடாமல் நிறுத்திய அரசு பேருந்து ஓட்டுனரால் இதர பேருந்துகள் செல்ல அவதி
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் வழி விடாமல் நிறுத்திய அரசு பேருந்து ஓட்டுனரால் இதர பேருந்துகள் செல்ல அவதி ஏற்பட்டது.
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் ஒரு பகுதி தினசரி காய்கறி மார்க்கெட்டாக செயல்பட்டு வருகிறது. இதனால் இடைப்பாடி, சேலம், திருச்செங்கோடு, நாமக்கல், கோவை உள்ளிட்ட அனைத்து பகுதிக்கும் செல்லும் பேருந்துகள் ஒரு பகுதியில் மட்டும் வந்து பயணிகளை இறக்கி விட்டு, ஏற்றி செல்லும் நிலை இருந்து வருகிறது. ட்ராபிக் காரணமாக போதிய கால அவகாசம் இல்லாமல் அடித்து பிடித்து வரும் பேருந்துகள், பயணிகளை இறக்கி விட்டு பறந்து செல்லும் நிலையில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று மாலை 03:00 மணியளவில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நெ.8 எனும் திருச்செங்கோடு செல்லும் அரசு பேருந்து ஓரமாக நிறுத்தாமல், பஸ் ஸ்டாண்ட் மையப்பகுதியில் நிறுத்தி விட்டு, அதன் ஓட்டுனர் வெளியில் சென்று விட்டார். பின்னால் வந்த பேருந்துகள் போக வழியில்லாமல் ஹாரன் அடித்துக்கொண்டு இருந்தனர். வெகு நேரம் ஆகியும் வராமல், யாரோ தகவல் சொல்ல, அதன் பின் சாகவாசமாக வந்து பேருந்தை ஓரமாக நிறுத்தி, இதர பேருந்துகளுக்கு வழி விட்டார். இது போல் அத்துமீறி செயல்படும் ஓட்டுனர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் நகரில் புதிய தாலுக்கா அலுவலகம், தினசரி காய்கறி மார்க்கெட் ஆகிய இரண்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்ட நிலையில், இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு தாலுக்கா அலுவலகம் திறக்கப்படவில்லை. தாலுக்கா அலுவலகம் தற்போது நகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கு குறிப்பிட்ட தொகை வாடகை செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. புதிய தாலுக்கா அலுவலகம் திறக்கப்பட்டால், வாடகை தர வேண்டிய நிலை இருக்காது. அதே போல் தினசரி காய்கறி மார்க்கெட் கொரோனா காலத்தில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டது. அதன்பின், பழைய காய்கறி மார்க்கெட் கட்டிடங்கள் மிகவும் சேதமானதால், மீண்டும் தினசரி காய்கறி மார்க்கெட் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஒரு வருடத்திற்கும் மேல் ஆனதால், வியாபாரிகள் கடும் அவஸ்தையை சந்தித்து வருகிறார்கள். மேலும் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மார்க்கெட் செயல்படும் பகுதியில், பஸ் ஸ்டாண்ட் வளாக நகராட்சி கடைகள் 20க்கும் மேல் உள்ளது. இந்த கடைகளில் பயணிகள் வர முடியாத நிலை ஏற்பட்டதால் போதிய வருமானம் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் பஸ் ஸ்டாண்ட் ஒரு பகுதியில் மட்டுமே அனைத்து பேருந்துகளும் வந்து செல்வதால், பெரும் இட நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அனைத்திற்கும் தீர்வாக இந்த இரண்டு புதிய கட்டிடங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தால் மிகுந்த பயன் தரும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu