குமாரபாளையத்தில் ஒன்றுசேர்ந்த முன்னாள், இந்நாள் தி.மு.க. நிர்வாகிகள்

குமாரபாளையத்தில் ஒன்றுசேர்ந்த முன்னாள், இந்நாள் தி.மு.க. நிர்வாகிகள்
X

குமாரபாளையத்தில் தி.மு.க. கட்சி அலுவலகத்தில் முன்னாள் தி.மு.க. நகர செயலர் வெங்கடேசன் தற்போதைய நகர பொறுப்பாளர் செல்வத்திற்கு சால்வை அணிவித்தார்.

குமாரபாளையம் தி.மு.க.வில் பிரிந்திருந்த முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் தனது ஆதரவாளர்களுடன் ஒன்று சேர்ந்தனர்.

குமாரபாளையம் தி.மு.க. முன்னாள் நகர செயலராக இருந்தவர் முன்னாள் கவுன்சிலர் வெங்கடேசன். மாவட்ட நிர்வாகத்தின் உத்திரவின் பேரில் சில மாதங்கள் முன்பு முன்னாள் கவுன்சிலர் செல்வம் நகர பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அண்ணா பிறந்த நாள், கருணாநிதி பிறந்த நாள் உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகள் அவரவர் ஆதரவாளர்களுடன் தனித்தனியே நடைபெற்று வந்தது. கட்சியின் வளர்ச்சி, கட்சியின் வெற்றி எவ்விதத்திலும் இதனால் பாதிக்கப்படக்கூடாது என்று இருவரும் முடிவெடுத்து, நேற்று தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த வெங்கடேசன், செல்வத்திற்கு சால்வை அணிவித்து இருவரும் இணைந்து கட்சி பணியாற்றுவது என முடிவு செய்தனர். செல்வமும் வெங்கடேசனுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.

பின்னர் அவர்கள் பேசுகையில், அனைவரும் இணைந்து பணியாற்றி, குமாரபாளையம் உள்ளாட்சி தேர்தலில் நகரமன்ற தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர் பதவிகளை வென்று மீண்டும் குமாரபாளையம் தி.மு.க. கோட்டை என்பதை நிரூபித்து, வெற்றியை கட்சியின் தலைவர் ஸ்டாலினிடம் ஒப்படைப்போம் என அனைவரும் உறுதியேற்போம் என தெரிவித்தனர்.

இரு தரப்பு நிர்வாகிகளும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!