ஆதரவற்றோர் மையத்திற்கு குளிர்சாதன பெட்டி வழங்கிய தேமுதிகவினர்

ஆதரவற்றோர் மையத்திற்கு குளிர்சாதன பெட்டி   வழங்கிய தேமுதிகவினர்
X

குமாரபாளையத்தில் ஆதரவற்றோர் மையத்திற்கு தே.மு.தி.க.வினர் குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கினர்.

குமாரபாளையத்தில் ஆதரவற்றோர் மையத்திற்கு தேமுதிகவினர் குளிர்சாதன பெட்டி அன்பளிப்பாக வழங்கினர்

குமாரபாளையத்தில் ஆதரவற்றோர் மையத்திற்கு தே.மு.தி.க.வினர் குளிர்சாதன பெட்டி வழங்கினார்கள்.

குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் பகுதியில் பாசம் ஆதரவற்றோர் மையம் செயல்பட்டு வருகிறது. திருமண நாள், பிறந்த நாள் உள்ளிட்ட விசேஷ நாட்களில் பொதுமக்கள் பலரும், இந்த மையத்தில் தங்கியுள்ள முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்கள்.

பொதுநல ஆர்வலர்கள் பலரும் இந்த மையத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கி வருகின்றனர். குமாரபாளையம் தே.மு.தி.க. கட்சி சார்பில் மாவட்ட செயலர் மகாலிங்கம் தலைமையில் மையத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தே.மு.தி.க. மாவட்ட செயலர் விஜய் சரவணன் பங்கேற்று, குளிர்சாதன பெட்டி, வாட்டர் பில்டர், 20 தலையணைகள், 20 படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பல பொருட்கள் வழங்க, மைய நிர்வாகி குமார் பெற்றுக்கொண்டார்.

நகர செயலர் நாராயணசாமி, ஒன்றிய செயலர் மணியண்ணன், மாவட்ட இளைஞரணி துணை செயலர் நாகராஜ், மாவட்ட தொண்டர் அணி செயலர் செல்வம், நிர்வாகிகள் நாகமணி, செல்வகுமார், வெள்ளியங்கிரி, ஆறுமுகம்,பழனிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.



Tags

Next Story
ai in future agriculture