பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்

குமாரபாளையத்தில் முதலைமைச்சரின் காலை உணவு திட்டத்தை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தொடக்கி வைத்தார்.
குமாரபாளையத்தில் முதலைமைச்சரின் காலை உணவு திட்டத்தை நகராட்சி தலைவர் துவக்கி வைத்தார்.
குமாரபாளையம் நகராட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் ஆயிரத்து 387 மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தொடக்கி வைத்தார்.
இதில் நகராட்சி ஆணையாளர் சரவணன், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன்,நகர மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர்செல்வராஜ், நகர மன்ற உறுப்பினர்கள், ஜேம்ஸ்,ராஜ், வேல்முருகன், கோவிந்தராஜன்,அழகேசன், கிருஷ்ணவேணி, சுமதி, விஜயா, மகேஸ்வரி, கனகலட்சுமி மற்றும் மாவட்ட, நகர தி.மு.க நிர்வாகிகள்,பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும். ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும் கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110 ன் கீழ் சில மாநகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேலைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழக முதல்வரால் 16.09.2022 அன்று மதுரையில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 16 பள்ளிகளிலும் கும்பகோணம் மாநகராட்சியில் 21 பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் ஏற்பட்டுள்ள நற்பயனை கருத்தில் கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 13.01.2023ம் நாளிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகைகளில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு 25.08.2023 -ல் நாகப்பட்டிணம் மாவட்டம், திருக்குவளையின் இத்திட்டம் முதமைச்சர் தொடக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக்க திட்டம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu