குமாரபாளையம் அருகே கோவில் கலசம் திருட்டு: போலீசார் விசாரணை

குமாரபாளையம் அருகே கோவில் கலசம் திருட்டு: போலீசார் விசாரணை
X

 பொன்காளியம்மன் கோயில்

குமாரபாளையம் அருகே கோவில் கலசம் திருட்டு போனது, இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

குமாரபாளையம் அருகே எலந்தகுட்டை பகுதியில் பொன்காளியம்மன் கோயில் உள்ளது. இதன் கோபுரம் மேல் பகுதியில் மூன்று கலசங்கள் உள்ளன. கோயில் பூசாரி கார்த்தி (35) இரவில் கோவிலில் தூங்குவது வழக்கம். தூங்கிக்கொண்டிருக்கும் போது, சிறிய ரம்பம் கொண்டு அறுக்கும் சத்தம் கேட்டுள்ளது. எழுந்து வந்து பார்த்த போது கோவிலின் கோபுர மேற்பகுதியில் அந்த சத்தம் வந்தது தெரிய வந்தது.

விளக்குகளை போட்டு பார்த்த போது, யாரோ அங்கிருந்து தப்பி செல்வது தெரிந்தது. கோபுரத்திற்கு லைட் அடித்து பார்த்த போது நடுவில் உள்ள கலசத்தின் மேல் பகுதி திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் வெப்படை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story