பள்ளிபாளையம்:ஆடி மாதம் கோவில் திருவிழாக்கள் ரத்து, பூ வியாபாரிகள் கவலை
பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் உள்ள பூக்கடையில் பூக்கள் குவிக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆடி மாதத்தில் நடைபெறும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆடி மாத திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யபட்டுள்ளன.
இதனால் பள்ளிபாளையம் சுற்றுவட்டார கோவில்களுக்கு பூக்களை ஏற்றுமதி செய்யும் பூ வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து பேசிய பூ வியாபாரிகள் கூறியதாவது.
ஆடி மாதத்தில் அதிகப்படியான கோவில் திருவிழாக்கள் வரும்..அந்த திருவிழாவிற்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் பூக்களை விரும்பி வாங்குவார்கள்.
மேலும் சாமி தரிசனத்திற்கு செல்பவர்களின் பூஜை கூடையில் நிச்சயம் பூக்கள் தவறாமல் இடம் படிக்கும்.ஆனால் தற்பொழுது ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து கோவில் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பூ வியாபாரம் குறைந்துள்ளது
அதே நேரத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பூ வியாபாரம் முழுமையாக முடங்கிவிட்டது.
தற்போது மெல்ல மெல்ல பூ வியாபாரம் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சூழலில் கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மேலும் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம்.
எனவே தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கோவில் திருவிழாக்களை நடத்த அனுமதி அளித்தால் எங்கள் தொழில் மேம்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu