குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழாவில் சிறப்பு அலங்காரம்

குமாரபாளையம் காளியம்மன்  கோவில்  திருவிழாவில் சிறப்பு அலங்காரம்
X

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் மாசித் திருவிழாவையொட்டி,  அம்மன் காஞ்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், காசி விசாலாட்சி அலங்காரத்தில் அருள்பாலித்தார். 

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் திருவிழாவில், முப்பெரும் தேவியர் அலங்காரத்தில் காளியம்மன் அருள் பாலித்தார்.

மாசி வெள்ளிக்கிழமை நாளையொட்டி, குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இதில், மாசித் திருவிழாவையொட்டி, காஞ்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், காசி விசாலாட்சி ஆகிய முப்பெரும் தேவியர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

இதேபோல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி