மழையால் மண் ரோட்டில் சகதி: கான்கிரீட் ரோடு போட்டால் நிம்மதி

மழையால் மண் ரோட்டில் சகதி: கான்கிரீட் ரோடு போட்டால் நிம்மதி
X

குமாரபாளையம் அருகே, டீச்சர்ஸ் காலனியில் மண்ணால் போடப்பட்டுள்ள இணைப்பு சாலை.

குமாரபாளையம் டீச்சர்ஸ் காலனி இணைப்பு சாலையை, கான்கிரீட் தளமாக மாற்ற வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையத்தில் இருந்து பவானி செல்லும் பஸ்கள், லாரிகள், டெம்போக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சேலம் - கோவை புறவழிச்சாலை, கவுரி தியேட்டர் பின்புறம் உள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியில் வந்து, புறவழிச்சாலை இணைப்பு சாலை வழியாக செல்கின்றன.

இந்த வளைவில், மண் சாலையாக உள்ளது. தற்போது மழை காலமாக உள்ளதால், மழை பெய்யும் போது சகதியாக மாறி டூவீலர்கள் இந்த வளைவில் செல்ல முடியாத நிலை உருவாகிறது. பல வாகனங்கள் சேற்றில் சிக்கி சறுக்கி கீழே விழுந்து காயமடையும் நிலை உருவாகி வருகிறது.

இப்பகுதியில், வேகமாக சென்றுதான், வாகனங்கள் திரும்ப முடியும். முன்னால் செல்பவர்கள் சறுக்கி விழும் நிலை ஏற்பட்டால், பின்னால் வேகமாக வரும் வாகனங்களால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த வளைவு சாலையை, கான்கிரீட் தளம் அல்லது தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil