குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே எம்.ஜி.ஆர் பெயரில் டீக்கடை துவக்கம்
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே ஆரம்பிக்கப்பட்டிருக்கும் எம்ஜிஆர் பெயரில் டீக்கடை
தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு சினிமாதான் அதிக நபர்களுக்கு பொழுது போக்கு. தியாகராஜ பாகவதர், பி. யூ. சின்னப்பா, உதயகுமார்,ரஞ்சன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ஆர், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல் ரஜினி, சத்யராஜ், விஜய், அஜீத், சூர்யா, சிவகார்த்திகேயன், என கதாநாயகர்கள் பலர் வந்திருந்தாலும் மக்கள் மனதில் என்றும் நிரந்தரமாக நிலை பெற்றவர் எம்.ஜி.ஆர் என்றால் அது மிகையில்லை.
அவர் நடித்த படங்கள் பாடமாக அமையும் வகையில் இருந்தது. அவர் நடிகராக மட்டுமே இல்லாமல் துன்பப்படும் மக்களுக்கு சமயத்தில் உதவும் வள்ளலாகவும் விளங்கினார். அரசியலில் ஈடுபட்டு தமிழக முதல்வராகி காமராஜரின் மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக அறிவித்து கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்தார். நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதனாலும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தார். அவர் இருக்கும் வரை முதல்வராக நீடித்தார். இன்றும் மக்கள் மனதில் நிலை பெற்றுள்ளார்.
குமாரபாளையத்தில் போலீஸ் ஸ்டேஷன் அருகே எம்.ஜி.ஆர். பெயரில் டீக்கடை தொடங்கப்பட்டுள்ளதே இதற்கு இன்னொரு சாட்சியாக அமைந்துள்ளது. உலக தமிழர்கள் மனதில் எம். ஜி.ஆர் பெயர் என்றும் நிலை பெறும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu