/* */

குமாரபாளையத்தில்'குடி' மகன்கள் ஆட்டம்; பொதுமக்கள் திண்டாட்டம்

குமாரபாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில்குடி மகன்கள் ஆட்டம்; பொதுமக்கள் திண்டாட்டம்
X

குமாரபாளையம்,  சேலம் சாலை பள்ளிபாளையம் பிரிவு பகுதியில், பழைய முருகன் தியேட்டர் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது பற்றி, குமாரபாளையம் பகுதி பொதுமக்களில் சிலர் கூறியதாவது: குமாரபாளையத்தில், சேலம் சாலை பள்ளிபாளையம் பிரிவு பகுதியில், பழைய முருகன் தியேட்டர் இருந்த இடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. காட்டூர், விட்டலபுரி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வழியும் இதுதான். இவ்வழியே பெண்கள் உள்ளிட்ட சிறுமியர், தங்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்வது வழக்கம்.

இந்த டாஸ்மாக் மதுக்கடையில், பார் வசதி இல்லாததால் மதுபானங்கள் வாங்கும் நபர்கள், கடையின் முன்பு கீழே உட்கார்ந்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில், பலர் இவ்வழியே செல்லும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதும், பேசுவதுமாக இருந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

இதுபோன்ற நபர்களால், பொதுமக்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகி வருகிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Updated On: 28 July 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...