குமாரபாளையம் : அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ப்ளஸ்2 செய்முறை தேர்வு இன்று நடக்கிறது

குமாரபாளையம் :  அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ப்ளஸ்2 செய்முறை தேர்வு  இன்று நடக்கிறது
X

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு. (மாதிரி படம்)

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பிளஸ்2 மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வுகள் தொடங்குகின்றன.

இன்று பிளஸ் 2 செய்முறைத் தேர்வு துவங்குவதால் குமாரபாளையம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 செய்முறை தேர்வுதுவங்குகிறது. இன்று தொடங்கும் இந்த செய்முறை தேர்வுகள் 24ம் தேதி வரை நடக்கிறது. காலை, 10மணிக்கு நாமக்கல் கல்வி மாவட்ட அளவிலும், மதியம் 2மணிக்கு திருச்செங்கோடு கல்வி மாவட்ட அளவிலும் தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், நர்சிங் தொழிற்பயிற்சி உள்ளிட்ட பிரிவுகளில் மாணவ, மாணவியர் செய்முறை தேர்வில் பங்கேற்க உள்ளனர். தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அரசின் நெறிமுறைகளை மாணவ, மாணவியர் பின்பற்ற வேண்டும். முக கவசம், கையுறை அணிந்து, சமூக இடைவெளியோடு செய்முறை தேர்வுக்கு வரவேண்டும். தலைமையாசியர்களும் இதனை உறுதிப்படுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நெறிமுறைகளை பின்பற்றி குமாரபாளையம் பகுதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் நடக்கவுள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!