தமிழ் மாநில முற்போக்கு தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் தமிழ் மாநில முற்போக்கு தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டத்தில் சிறந்த கல்வி சேவை செய்த விடியல் பிரகாஷ்-க்கு பொன்குமார் விருது வழங்கினார்
குமாரபாளையத்தில் தமிழ் மாநில முற்போக்கு தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம் கிளை தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
குமாரபாளையத்தில் தமிழ் மாநில முற்போக்கு தொழிலாளர்சங்க ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கட்டுமான வாரிய தலைவர் பொன்குமார் பங்கேற்று பேசியதாவது: என்னிடம் கோரிக்கைகள் தருவீர்கள். அதனை நிறைவேற்றி தந்தால் எனக்கு எதிராக போராட்டம் நடத்துவீர்கள். மீண்டும் என்னையே அழைத்து பேச வைப்பீர்கள். எது எப்படி இருப்பினும் என் கடைமையை தவறாமல் செய்து வருவேன். இயற்கையை நாம் அழித்தால், இயற்கை பதிலுக்கு நம்மை திருப்பி அடிக்கிறது. அதுதான் துருக்கி நில அதிர்வு சம்பவம். வாழ்வில் அனைவருக்கும் பொது நோக்கம் வேண்டும். பாராட்டும்படி நடந்து கொள்ள வேண்டும். இதுவரை 9 லட்சம் பயனாளிகளுக்கு 670 கோடி ரூபாய் பணப் பயன் பெற்று தந்துள்ளோம்.
வீட்டு நிலம் வாங்குவதற்காக வாரியத்தில் சேரக்கூடாது. நலவாரியத்தில் சேர்ந்த நபருக்கு வீடு இல்லை என்றால், வீடு தர ஏற்பாடு செய்யலாம். ஆண் பிள்ளைகளுக்கும் கல்வி உதவி தொகை கேட்டுள்ளீர்கள். பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும் உங்கள் கோரிக்கை அரசுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். சிறந்த கல்வி சேவை செய்த விடியல் பிரகாஷ்-க்கு பொன்குமார் விருது வழங்கினார். கட்டுமான வாரிய ஆலோசகர் அழகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் குறித்து மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. இதன் மூலம் தமிழக அரசால் 17 நல வாரியங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் என்பது தமிழக அரசினால் கட்டுமானத் தொழிலாளர்கள் நலனிற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் ஒன்று ஆகும். இது தமிழகத் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்குகிறது. 54 வகையான கட்டுமான தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கும் நலத்திட்ட உதவிகளுக்கும் இவ்வாரியம் 30.11.1994 அன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது. இதில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, விபத்து ஊன நிவாரணம், வீடு கட்ட உதவித்தொகை, ஈமச்சடங்கு, இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்து விபத்து மரணம், ஒய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், முடக்கு ஒய்வூதியம், போன்ற நலத்திட்ட உதவிகள் பெறமுடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu