குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி
குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில், தமில்ல்கூடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை உத்தரவின்படி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுக்கு மூன்று தமிழ் கூடல் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். பள்ளிக்கல்வித்துறை உத்தரவுக்கு இணங்க நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டாவது தமிழ் கூடல் நிகழ்வு தலைமையாசிரியை செல்வி தலைமையில் நடைபெற்றது. தமிழ் ஆசிரியர் குமார், தமிழ் கூடல் நிகழ்ச்சியின் நோக்கம், பயன்கள் ஆகிய குறித்து பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் சிந்தனை பேரவைத் தலைவர் ரமேஷ் குமார், நவரசங்களின் நன்மை தீமைகள் என்னும் தலைப்பில் பேசினார். தமிழ் சிந்தனைப் பேரவை செயலாளர் கமலசேகரன் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள்.
மாணவர்களுக்குப் பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம், போட்டி, பாட்டுப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதோடு வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்களையும் மேடைக்கு அழைத்து பாராட்டப்பட்டது.
மாணவர்களின் பெற்றோர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று,தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். போட்டியில் பங்கேற்ற 120 மாணவ மாணவிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஆசிரியர் மாதேசு நன்றி கூறினார். ஆசிரியர்கள் முத்து, அருள், தங்கராஜ், ஜெகதீஸ், பார்வதி, கீதா மாதேஸ்வரி மற்றும் பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu