குமாரபாளையத்தில் தேவாங்கர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் விழா

குமாரபாளையத்தில் தேவாங்கர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் விழா
X

குமாரபாளையம் தேவாங்கர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் விழா நடைபெற்றது. தி.மு.க. நகர செயலர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி தேவாங்கர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் விழா நடைபெற்றது.

குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி தேவாங்கர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் விழா நடைபெற்றது.

குமாரபாளையம் காளியம்மன் கோயில் மகா குண்டம், தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்றுமுன் தினம் மகா குண்டம், பூ மிதித்தல் வைபவத்தில் ஐந்தாயிரத்தும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்ற குண்டம் இறங்கினர். நேற்று காலை அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றதுடன் தேர்த்திருவிழா துவங்கியது. பக்தர்கள் ஆர்வத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ராஜா வீதி, சேலம் சாலை, தம்மண்ணன் சாலை, வழியாக வந்த தேர் புத்தர் வீதியில் நிறுத்தப்பட்டது.

நேற்று காலை மீண்டும் இரண்டாம் நாள் தேரோட்டம் துவங்கி, புத்தர் வீதி, ராஜா வீதி வழியாக சென்று, காளியம்மன் கோவில் வளாகத்தில் நிலை சேர்ந்தது. ஓம் சக்தி, ஓம் சக்தி என சரண கோஷமிட்டு பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். நேற்று இரவு கோவில் வளாகம் மற்றும் காவிரி ஆற்றில் கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை காவிரி பழைய மற்றும் புதிய பாலங்கள், காவிரி ஆற்றின் மணல் பகுதி, பவானி காவிரி கரையோர பகுதி மக்கள் என பொதுமக்கள் பெருமளவில் திரண்டு வேடிக்கை பார்த்தனர்.

குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவிலில் பூ மிதித்தல் வைபவம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது . நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

தேவாங்கர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. நகர செயலர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்