உச்சநீதிமன்றம் தீர்ப்பு: அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பினையொட்டி, குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பினையொட்டி, குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு, முன்னாள் முதல்வர் இடைப்பாடி பழனிசாமி அணியினருக்கு சாதகமாக வந்தது. இதனை கொண்டாடும் விதமாக குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில், நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் பஸ் ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன் அருகில், ஆகிய இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கவுன்சிலர் புருஷோத்தமன், நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ரவி, அர்ச்சுணன், சிங்காரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியதாவது: அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மமே மீண்டும் வெல்லும் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், லேப்டாப், மானிய விலை ஸ்கூட்டி, உள்ளிட்ட பல திட்டங்களை ஸ்டாலின் நீக்கியுள்ளார். இலவச பஸ் என்று கூறிவிட்டு பாதி பஸ் வருவதே இல்லை. பஸ் நடத்துனர்கள் பெண்களை இழிவாக பேசுவதுடன், அமைச்சர் ஒருவரே ஓசி பஸ் என்கிறார்.
எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியதே கருணாநிதி எனும் தீய சக்தியை அழிக்கத்தான். நீட் இருக்காது என்றார்கள். ௨ ஆண்டுகளில் 15 மணாவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மகளிர் குழு கடன், கல்விக்கடன் எல்லாம் தள்ளுபடி என்றார். அதுவும் இல்லை. கரும்பு முதலில் பொங்கல் பரிசில் இல்லை என்றார். நானும் முன்னாள் அமைச்சர் முனுசாமியும் திருவண்ணாமலையில் போராட்டம் அறிவித்த உடன் கரும்பு உள்ளது என்றார் ஸ்டாலின்.
கிராமப்புற மக்கள் பயனடைந்த அம்மா கிளினிக் திட்டம் இல்லாமல் போனது. கால்பந்தாட்ட வீரர் பெண்மணி சிகிச்சை பற்றி கேட்டால், சுகாதரத்துறை அமைச்சர் , நயன்தாரா மனம் நோகும் படி யாரும் பேச வேண்டாம், என்று கூறுகிறார். எதற்கு எடுத்தாலும் போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்ட் தற்போது எதற்கும் போராட்டம் நடத்துவது இல்லை. சொத்துவரி, மின்சார கட்டணம், காலிமனை வரி என மக்கள் மிகவும் துன்பத்தில் மூழ்கி உள்ளனர். விசைத்தறிக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம் இல்லை. நாங்கள் 8 ஆண்டுகளாக மின்கட்டணம் உயர்த்தவில்லை. டாஸ்மாக் சரக்கு வீடு, வீடாக விற்கப்படுகிறது. மாணவர்களை கஞ்சாவிற்கு அடிமையாக்கி விட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கு எங்கு சென்றாலும் கூட்டம் அலைமோதுகிறது. எப்போது அ.தி.மு.க. ஆட்சி வரும் என மக்கள் கேட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu