குமாரபாளையத்தில் அதிகபட்ச மழை பதிவு

குமாரபாளையத்தில் அதிகபட்ச  மழை பதிவு
X

மழை (மாதிரி படம்)

நேற்று மாலை பெய்த மழையில் குமாரபாளையம் பகுதியில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று மாலை கனமழை பெய்தது.

கடந்த சில நாட்களாகவே பகலில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. ஆனாலும் மாலை வேளைகளில் மழை பெய்து பகல் நேரத்து வெப்பத்தை தணித்து விடுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று மாலை குமாரபாளையம், நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லி மலை உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. காற்றும் வேகமாக வீசியது. காற்று குறைவாக வீசியிருந்தால் இன்னும் மழை நீடித்திருக்கும் என்று இப்பகுதி விவசாயிகள் கூறினர். மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து வெள்ளம்போல ஒடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக குமாரபாளையத்தில் 28.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. நாமக்கல் 20 மி.மீ., சேந்தமங்கலம் 24மி.மீ., திருச்செங்கேடு 5மி.மீ., கொல்லிமலை 12மி.மீ., ராசிபுரம் 1.2மி.மீ., என மாவட்டம் முழுவதும் 98.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Tags

Next Story