குமாரபாளையத்தில் மாணவர் தற்கொலை தடுப்பு ஓவிய பிரச்சாரம்

குமாரபாளையத்தில் மாணவர் தற்கொலை தடுப்பு ஓவிய பிரச்சாரம்
X

குமாரபாளையத்தில் மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க வாலிபர் ரஞ்சித் ஓவியம் வரைந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

குமாரபாளையத்தில் மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க இளைஞர் ரஞ்சித் ஓவியம் வரைந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

நீட் உள்ளிட்ட தேர்வில் தேர்ச்சி பெறாமை, கடினமான பாட தேர்வு, மன உளைச்சல் உள்ளிட்ட பல காரணங்களால் மாணவ, மாணவியர் தற்கொலை செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க குமாரபாளையத்தை சேர்ந்த ரஞ்சித், 24, என்ற வாலிபர் ஒவ்வொரு பள்ளிக்கு சென்று சில மாணவ, மாணவியர்களை ஓவியமாக வரைந்து, அவர்கள் பெயருடன் டாக்டர், பொறியாளர், விஞ்ஞானி, தொழிலதிபர், எம்.எல்.ஏ. என சேர்த்து எழுதி கொடுத்து, நீங்கள் இப்படி ஏதோ ஒரு துறையில் சாதிக்க பிறந்தவர்கள், சாவதற்கு பிறந்தவர்கள் அல்ல, தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வல்ல, என பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா