அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம்

அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை கல்வி கற்க சேர்த்துவிடுங்கள் என குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது
குமாரபாளையத்தில் அரசு பள்ளி சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
தரமான கல்வியும், நிறைவான உட்கட்டமைப்பு வசதிகளும், திறமையான ஆசிரிய பெருமக்களையும் கொண்டு சிறப்பாக இயங்கும் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை கல்வி கற்க சேர்த்துவிடுங்கள் என குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமை வகித்தார். மேற்கு காலனி, தெற்கு காலனி உள்ளிட்ட பல பகுதியில் மாணவ, மாணவியர்கள் ஊர்வலமாக சென்று, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, உங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வையுங்கள் என்று பிரச்சாரம் செய்தனர். இதில் பி.டி.ஏ. தலைவர் ரவி, கவுன்சிலர் பரிமளம், பள்ளி மேலாண்மை குழு தலைவி மணிமேகலை உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வாசகங்கள் :
அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம் நம் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம்..நமது எதிர்காலத்தை திட்டமிடுவோம்ஆடல், பாடல், விளையாட்டுச் செயல்பாடுகள் வாயிலாக பாடங்களை கற்றுக் கொள்ளும் எண்ணும் எழுத்தும் திட்டம்.அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5% இடஒதுக்கீடு.அரசுப்பள்ளி மாணவிகளின் உயர்கல்விக்கென புதுமைப்பெண்'திட்டத்தின்கீழ் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை.வாசிப்புத் திறனை வளர்க்க தேன்சிட்டு எனும் சிறார் இதழ் நூலகத்திற்கென்று தனி நேரம்.இதழ்களின் படைப்புகளிலிருந்து வினாடி வினா போட்டிகள் திரைப்பட ரசனை யையும் விமர்சனம் பார்வையையும் வளர்க்க பள்ளிதோறும் சிறார் திரைப்பட விழாக்கள்.
இலக்கிய ஆர்வத்தை வளர்க்க பேச்சு, கட்டுரைப் போட்டிகள் உட்பட இலக்கிய மன்றச் செயல்பாடுகள்.அரசியல் சாசனம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வானவில் மன்றம்.ஆட்டக்கலைகள், இசை, நாடகம், நடனம், ஓவியம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளிலும் பள்ளியில் பயிற்சி, பள்ளி தொடங்கி மாநில அளவில் கலைத் திருவிழாபள்ளி அளவில் தொடங்கி மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.ஆண்டுதோறும் மாநில அளவிலான கலைத் திருவிழா சிறார் திரைப்பட விழா, சிறார் இலக்கியத் திருவிழா, விளையாட்டுப் போட்டிகள், வானவில் மன்றப் போட்டிகள், வினாடி வினா போட்டிகள் ஆகியவற்றில் வென்ற மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா.
பள்ளி நேரம் முடிந்த பின்னும் கற்க விரும்பும் மாணவர்களுக்கென்றே இல்லம் தேடிக் கல்வித் திட்டம்.ஒவ்வொரு பள்ளியிலும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர்கல்வி/வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுக்க உதவி.மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கென தனிச் சிறப்பு மையங்கள் அவர்கள் மற்ற மாணவர்களோடு பள்ளியில் இணைந்தும் கல்வி கற்கலாம்.எண்ணும் எழுத்தும்.ஜூன் 7' முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.ஆகியன துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu