தெரு நாய்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்
தெரு நாய்கள் (மாதிரி படம்)
குமாரபாளையத்தில் தெருக்களில் உலாவும் தெரு நாய்களால் சாலையில் நடந்து செல்வோரும் வாக ஓட்டிகளும் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு பெரும் தொல்லையாக இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.
குமாரபாளையம், நகராட்சியில் நாய்கள் தொந்தரவு அதிகம் இருப்பதால், சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகம் சார்பில் கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நகரில் உள்ள அனைத்து வார்டுகளில் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து ஒவ்வொரு நகராட்சி கூட்டங்களிலும் அனைத்து கவுன்சிலர்களும் புகார் கூறி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் பதில் கூறும் போது பேசியதாவது:
விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் பிரதான சாலைகளான சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள், மாணவ, மாணவியர், வயதானவர்கள், நடைபயிற்சி செய்பவர்கள், விசைத்தறி, கைத்தறி, சாயப்பட்டறை உள்ளிட்ட பணிகளுக்கு செல்வோர் உள்ளிட்ட பலர் இந்த நாய்களால் பெறும் அவஸ்தைக்கும், அச்சத்திற்கும் ஆளாகி வருகிறார்கள். பொதுமக்கள் அச்சத்தை போக்கி, வழக்கம்போல் பொதுமக்கள் நடமாடிட, நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu