ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசளித்த திமுகவினர்

ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசளித்த திமுகவினர்
X

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த குழந்தைக்கு திமுக மாவட்ட செயலர் மதுரா செந்தில்  தங்கமோதிரம் பரிசளித்தார்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த குழந்தைக்கு திமுக மாவட்ட செயலர் தங்கமோதிரம் பரிசளித்தார்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த குழந்தைக்கு தி.மு.க சார்பில் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்து கூறப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழா குமாரபாளையம் தி.மு.க. சார்பில், கட்சி கொடியேற்றுதல், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அனைத்து வார்டுகளில் நடைபெற்றன. இதில் ஒரு கட்டமாக ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த நாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

குமாரபாளையம், காளியண்ணன் நகரை சேர்ந்த கிரிஜா, பிரபு தம்பதியினருக்கு குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் பெண் குழந்தை பிறந்தது. அதன்படி, தி.மு.க. நகர செயலர் செல்வம் தலைமையில், மாவட்ட செயலர் மதுரா செந்தில் பங்கேற்று, குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தினார். மேலும் மற்ற நாட்களில் பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு பழங்கள், பிஸ்கட், பால் ஆகியன வழங்கப்பட்டன. நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ராஜ்குமார், கவுன்சிலர்கள் ரங்கநாதன், சத்தியசீலன், ஜேம்ஸ், வேல்முருகன், உள்பட பலர் பங்கேற்றனர்.

ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தமிழக அரசின் சார்பில் குழந்தைகள் நலனுக்காக, மாணவ, மாணவியர் நலனுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக அங்கன்வாடி குழந்தைகளுக்காக ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க. மாவட்ட செயலர் மதுரா செந்தில் அறிவுறுத்தலின்படி, அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம், கலைவாணி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு கவுன்சிலர் கோவிந்தராஜ் பங்கேற்று ஊட்டச் சத்து உணவு வழங்கினார்.

ஸ்டாலின் பிறந்த நாள் விழாவுடன், ஈரோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை கொண்டாடும் விதத்தில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதே போல் தி.மு.க. நகர செயலர் செல்வம், காங்கிரஸ் நகர துணை தலைவர் சிவகுமார் தலைமையில் அனைத்து வார்டுகளில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.இதில் நிர்வாகிகள் செந்தில்குமார், செல்வராஜ், ஐயப்பன், கவுன்சிலர் ஜேம்ஸ், வேல்முருகன், சிவராஜ், சுப்ரமணி, கோகுல்நாத், சக்திவேல், தங்கராஜ், மனோகரன், தாமோதரன், ஆறுமுகம், குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் அனைத்து வார்டுகளில் கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டு போட்டிகள், பெண்களுக்கு கோலபோட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் மற்றும் நகர நிர்வாகிகள், கவுன்சிலர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.



Tags

Next Story
ai in future agriculture