காளியம்மன் கோவிலில் தேவாங்கர் பூசாரிகள், அர்ச்சகர்கள் சிறப்பு வழிபாடு

காளியம்மன் கோவிலில் தேவாங்கர் பூசாரிகள், அர்ச்சகர்கள் சிறப்பு வழிபாடு
X

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் தேவாங்கர் பூசாரிகள், அர்ச்சகர்கள் சிறப்பு வழிபாட்டையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் தேவாங்கர் பூசாரிகள், அர்ச்சகர்கள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் பூமிதி விழா, தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, அம்மன் திருகல்யாணம், வான வேடிக்கை, சர்வ அலங்கார மற்றும் மஞ்சள் நீர் திருவீதி உலா, ஊஞ்சல் விழா நடைபெற்றது. தினமும் ஒவ்வொரு சமூகத்தினர், பல தரப்பட்ட வியாபாரிகள் சங்கத்தினர், சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

நேற்று தேவாங்கர் பூசாரிகள், அர்ச்சகர்கள் சங்கம் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. காவிரியில் இருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, உலக நன்மை வேண்டி சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் திருவீதி உலா மங்கள இசையுடன் நடைபெற்றது.

Tags

Next Story
ai marketing future