மாசி மகத்தையோட்டி குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

மாசி மகத்தையோட்டி குமாரபாளையம் கோவில்களில்  சிறப்பு வழிபாடுகள்
X

குமாரபாளையம் திருவிழாவையொட்டி பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மன் எலுமிச்சை கனி மாலையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

திருவிழா, மாசி மகத்தையோட்டி குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காளியம்மன் கோவில், அனைத்து மாரியம்மன் கோவில்களில் பூச்சாட்டு விழா நடைபெற்று தினசரி சிறப்பு வழிபாடுகள், சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்து வருகிறது.

தம்மண்ணன் வீதியில் உள்ள 24 மனை மாரியம்மன் கோவிலில் அம்மன் பாப்பாயம்மாள் அலங்காரத்திலும், பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மன் எலுமிச்சை மாலை சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். உடையார்பேட்டை ராஜவினாயகர் கோவிலில் சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்து, மண்டலாபிஷேக விழா நடந்து வருகிறது.

நேற்றைய வழிபாட்டில் சுவாமி கைகளில் வீணையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாசி மகம் நாளையொட்டி திருவள்ளுவர் நகர், மங்களாம்பிகை, மகேஸ்வரர் கோவிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

இதே போல் அனைத்து சமூக காளியம்மன் கோவில், கோட்டைமேடு காளியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், கள்ளிபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!