குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் மறு பூச்சாட்டு விழா, கொடியேற்றம் நடைபெற்றது.
இந்நிலையில், பிப். 27ல் அம்மனுக்கு தீர்த்தக்குட புனித நீர் ஊற்றுதல், தேர் கலசம் வைத்தல், காவேரி ஆற்றுக்கு சென்று சக்தி அழைத்து வருதல், பிப். 28ல் மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் விழா, அலங்கார ஆராதனை, பிப். 29ல் அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வண்டிவேடிக்கை, மார்ச். 1ல் தேர் நிலை அடைதல், நாதஸ்வர இன்னிசையுடன் அம்மன் திருவீதி உலா, மார்ச். 2ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, மார்ச். 3ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா ஆகியன நடைபெறவுள்ளன.
முன்னதாக பராமரிப்பு செய்யப்பட்ட தேர், வழக்கமாக தேரோட்டம் நடைபெறும் வீதிகளில், செயல் அலுவலர் குணசேகரன், விழாக்குழுவினர் முன்னிலையில் வெள்ளோட்டம் விடப்பட்டது. பக்தர்கள் ஆர்வத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்று, மீண்டும் நிலை சேர்த்தனர்.
குமாரபாளையம் தம்மண்ணன் வீதி 24 மனை மாரியம்மன் கோவிலில் அம்மன் வாராஹி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேதாஜி நகர் சந்தோசி அம்மன் கோவிலில் அம்மன் குறத்தி அலங்காரத்தில் அருள்பாலித்தார். வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில், தேவாங்கர் மாரியம்மன், பெரிய மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், கள்ளிபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவில்கள், கோட்டைமேடு பத்ரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu