குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் அம்மன் கோவில்களில்  சிறப்பு வழிபாடு
X

குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்

வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தாலே போதும் தீராத குடும்ப கஷ்டம் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம்

குமாரபாளையத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

தை மாதம் வெள்ளிக்கிழமை நாளையொட்டி குமாரபாளையம் கோட்டைமேடு காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இதே போல் சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மம் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

வெள்ளிகிழமை அம்மன் வழிபாடு குறித்து முன்னோர்கள் கூறியதாவது: வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபாடு செய்தாலே போதும். தீராத உங்கள் குடும்ப கஷ்டம் அனைத்தும் தீரும். வெள்ளிக்கிழமை அம்மனை குறிப்பிட்ட இந்த நேரத்தில் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும். வாழ்க்கையில் அடுத்தடுத்து எல்லாமே நல்லதாகவே நடக்கும் ஆண்டவன் குறைவில்லாமல் எல்லா செல்வத்தையும் கொடுப்பார் கொடுத்திருக்கிறார் என்ற திருப்தியோடும் இருப்பது நல்லது.

வெள்ளிக்கிழமை எந்த நேரத்தில் அம்பாளை வழிபாடு நடத்தினா் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் சீக்கிரத்தில் தீரும். வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரை வரும் வரும் நேரத்தில் அம்பாள் கோவிலில் இருக்க வேண்டும். அம்பாளை பார்த்து வழிபாடு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை காலை 6 மணியில் இருந்து 7 மணி வரை சுக்கிர ஹோரை. வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியிலிருந்து 2 மணி வரை சுக்கிர ஹோரை. இதையும் தவிர வெள்ளிக்கிழமை இரவு 8 லிருந்து 9 மணி வரை சுக்கிர ஹோரை உள்ளது.

இந்த மூன்று மணி நேரத்தில் உங்களுக்கு எந்த நேரம் சௌகரியமோ அந்த நேரத்தில் நீங்கள் அம்மன் கோவிலில் அம்மனை பார்த்தவாறு, அம்மனை தரிசனம் செய்ய வேண்டும். குறிப்பாக காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் அம்பாளை தரிசனம் செய்வது, மிகமிக சிறப்பான நேரமாக சொல்லப்பட்டுள்ளது.

வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஹோரையில் அம்மனிடம் வேண்டுதல் வைத்தால் அது உடனடியாக பலிக்கும். ஒரே ஒரு வாரம் இந்த வழிபாட்டை செய்துவிட்டு பலனை எதிர்பார்க்க கூடாது. வாரம்தோறும் தவறாமல் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மனை நம்பிக்கையோடு வழிபாடு செய்து வந்தால் ஐந்திலிருந்து ஏழு வாரத்திற்குள், உங்களின் வேண்டுதலுக்கான வரத்தை அம்பாள் சீக்கிரமே கொடுத்து விடுவாள். அதன் பின்பு உங்களுடைய குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிறைவாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த முறைப்படி வழிபாடு செய்து நல்ல பலன்களை அடையலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்

.


Tags

Next Story
ai in future agriculture