ஒலி, ஒளி அமைப்பாளர்கள் சார்பில் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு: பணி தீவிரம்

ஒலி, ஒளி அமைப்பாளர்கள் சார்பில் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு: பணி தீவிரம்
X

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் ஒலி, ஒளி அமைப்பாளர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெறுவதையொட்டி சாரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஒலி, ஒளி அமைப்பாளர்கள் சார்பில் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது.

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் பூமிதி விழா, தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, அம்மன் திருகல்யாணம், வாண வேடிக்கை, சர்வ அலங்கார மற்றும் மஞ்சள் நீர் திருவீதி உலா, ஊஞ்சல் விழா நடைபெற்றது.

தினமும் ஒவ்வொரு சமூகத்தினர், பல தரப்பட்ட வியாபாரிகள் சங்கத்தினர், சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். இன்று குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஒலி, ஒளி அமைப்பாளர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது.

இதனையொட்டி நகரில் பல இடங்களில் வண்ண வண்ண விளக்குகளால் சுவாமிகளின் உருவங்கள் அமைக்க சாரங்கள் அமைக்கப்பட்டன. வண்ண மயமான இந்த திருவிழாவை காண பல மாவடங்களில் இருந்து மக்கள் கூட்டம் வருவது வழக்கம். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை குமாரபாளையம் போலீசார் செய்து வருகின்றனர்.

காலையில் தீர்த்தக்குட ஊர்வலம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் திருவீதி உலா மங்கள இசையுடன் நடைபெறவுள்ளது.

Tags

Next Story