குமாரபாளையத்தில் வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட எஸ்.பி.
குமாரபாளையத்தில் ஓட்டுச்சாவடிகளை போலீஸ் எஸ்.பி. பார்வையிட்டார்.
ஈரோடு லோக்சபா தொகுதியில் நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர குமாரபாளையம் தொகுதியும் அடங்கும். குமாரபாளையம், பள்ளிபாளையம் இரு நகராட்சிகளை கொண்ட குமாரபாளையம் தொகுதியில் லோக்சபா தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சியினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். ஈரோடு தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் தொகுதியில், தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரம் விநியோகம், ஓட்டு போட அத்தாட்சி சீட்டு வழங்குவதற்கான பணிகள் ஆகியன செயல்படுத்தி வருகிறார்கள்.
லோக்சபா தேர்தலில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் ஓட்டுப்பதிவு செய்யும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் குமாரபாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. போலீசாரும் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 279 ஓட்டுப்பதிவு மையங்களில் பாதுகாப்பு வசதி, உள்ளிட்டவைகளை நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணா நேரில் பார்வையிட்டு, ஓட்டுச்சாவடி அருகில் உள்ள வீடு, கடைகள், ஆகியோரின் தகவல் சேகரிக்க வேண்டும், பாதுகாப்பு பணிகள் உறுதி செய்திட வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ. கெங்காதரன் உள்பட போலீசார் பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu