வேளாண் சட்டங்கள் ரத்து அறிவிப்பு: இனிப்பு வழங்கிய பொதுநல ஆர்வலர்கள்
வேளாண் சட்டங்கள் ரத்து செய்ததற்கு, குமாரபாளையத்தில் பொதுநல ஆர்வலர்கள் இனிப்பு வழங்கினர்.
வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று, பாரத பிரதமர் மோடி, நேற்று அறிவித்தார். இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவ்வகையில், குமாரபாளையத்தில் பொதுநல ஆர்வலர்கள், வேளாண் சட்டம் ரத்து செய்ததற்கு, இனிப்பு வழங்கினர்.
பள்ளிபாளையம் சாலையில் நடந்த நிகழ்வில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விவசாய போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு பாராட்டும், இந்த போராட்டத்தில் உயிர்நீத்த நபர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. வேளாண் சட்ட போராட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பொதுநல ஆர்வலர்கள் கூறுகையில், மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து அறவழியில், டெல்லியில் போராடிய விவசாய மக்களின் வெற்றியை கொண்டாடுவோம். இதற்காக போராடி உயிர்நீத்த தியாகிகள் என்றென்றும் வரலாற்றின் பொன் ஏடுகளில் இடம் பெறுவார்கள். அவர்கள் அனைவரையும் போற்றுவோம் என்றனர். இதில் பொதுநல ஆர்வலர்கள் பாலசுப்ரமணியன், செல்வராசு, அறிவொளி சரவணன், பாலசுப்ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu