சித்த வேதா மைய விருது வழங்கும் விழா

சித்த வேதா மைய விருது  வழங்கும் விழா
X

படவிளக்கம் :

குமாரபாளையத்தில் நடந்த அமெரிக்காவின் சித்த வேதா மையத்தின் சர்வதேச விருது வழங்கும் விழாவில், பல்வேறு பிரிவுகளில் திறம்பட பணியாற்றியவர்களுக்கு சேவை செம்மல் விருதுகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச விருது விழாவில், அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் உள்ள சித்தா வேதா மையத்தின் துணைவேந்தர் சண்முக மூர்த்தி லட்சுமணன், தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக திருப்பூர், பல்லடம் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தினசரி ஒரு லட்சம் நபர்களுக்கு 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் ஆற்றல் அமைப்பின் உரிமையாளர் அசோக்குமாருக்கு சிறந்த உணவு வழங்கும் சேவைக்கான விருதும், வ.உ.சி விருது கலைமாமணி சேலம் பாலன், குரல் பீட விருது திருமலை அழகன், அருட்பா விருது முனைவர் லதா என பெரும்பாலோருக்கு அவர்களின் சேவைக்காக விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் அரசு பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனத்தின் தலைவர் மதிவாணன், சக்தி சன்மார்க்க சங்க தலைவர் அருள் நாகலிங்கம் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது