கழிவுநீரை திறந்து விட்டதால் தனியார் மில் முன்பு பொதுமக்கள் போராட்டம்

கழிவுநீரை திறந்து விட்டதால் தனியார் மில்  முன்பு பொதுமக்கள் போராட்டம்
X

பள்ளிபாளையம் அருகே கழிவுநீரை திறந்து சாலையில் விட்டதால்,  தனியார் மில் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

பள்ளிபாளையம் அருகே, கழிவுநீரை திறந்து சாலையில் விட்டதால் ஆவேசமடைந்த பொதுமக்கள், தனியார் மில் முன்பு சாலை மறியல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படையில் இருந்து, ஆனங்கூர் செல்லும் சாலை உள்ளது. இங்கு நெட்டவேலம்பாளையம் பகுதியில், தனியார் ஸ்பின்னிங் மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சாலையில் திறந்து விட்டதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தனியார் மில் வாயில் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து விரைந்து வந்த பள்ளிபாளையம் போலீசார், பொதுமக்களிடமும், மில் நிர்வாகத்தினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிட வைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்