குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் ரேணுகா பேசினார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் மன்றத்தின் சார்பில் வேலை வாய்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு வாசவி கல்லூரி கணிதவியல் துறை உதவி பேராசிரியர் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய உதவி பேராசிரியர் வைத்தியலிங்கம், பல்வேறு அரசு துறைகளில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். எந்தெந்த படிப்புகள் படிக்கலாம் என்பது பற்றியும், கல்வி உதவி தொகை பெறுவது குறித்தும், போட்டி தேர்வுக்கு தயாராகுதல் குறித்தும், அவைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவது குறித்தும் அறிந்து கொண்டு, அதற்கான செயல்பாட்டில் உடனே செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கணித துறை தலைவர் ரமேஷ் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் மன்ற விழா கருத்தரங்கம் முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. தமிழ் பேராசிரியர் மூர்த்தி பங்கேற்று, திருக்குறளில் மேலாண்மை என்ற தலைப்பில் பேசினார்.
அவர் பேசுகையில், வணிக நிர்வாகவியல் மாணவர்கள் நிர்வாகத்தில் சிறந்து விளங்க திருவள்ளுவர் கூறிய வழியில் நடக்க வேண்டும், மேலாண்மை பண்புகளான காலம் தவறாமை, தன்னம்பிக்கை, கூர்மையான சிந்தனை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மேலும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவதற்கு பாடங்களை கற்பதோடு நின்று விடாமல் மற்ற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம், பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர்கள், உயர்கல்வி பயில, வழிகாட்டுதல் களப்பயணம் என்ற அடிப்படையில் திருச்செங்கோடு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியர் 100 பேர், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகை தந்தனர். இவர்களை அரசு கல்லூரி மாணவ, மாணவியர் நடனத்துடன் வரவேற்றனர். கல்லூரி முதல்வர் ரேணுகா அனைவருக்கும் மலர்கள் கொடுத்து வரவேற்றார். கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், எதற்காக இந்த பயணம்? என்பது குறித்து முதல்வர் ரேணுகா விளக்கி பேசினார். அதன் பின் வகுப்பறையில் பாடங்கள் நடத்தும் முறை, நூலகம், ஆய்வகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளை நேரில் அழைத்து சென்று காட்டினர். இது குறித்து முதல்வர் ரேணுகா கூறியதாவது: அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள், அரசு கல்லூரியில் உள்ள வசதிகள், கற்றுக்கொடுக்கும் தன்மைகள் குறித்து அறியச்செய்து, அவர்களை அரசு கல்லூரியில் உயர்கல்வி பயில வைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வு அரசு உத்திரவின்படி நடத்தப்பட்டது. பேராசிரியர்கள் ரகுபதி, கீர்த்தனா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான சமூகநீதி குறித்த கருத்தரங்கம் முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்ததது.
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் செல்வமுத்து குமாரசாமி, சமூகநீதியின் போராளி டாக்டர் அம்பேத்கார் என்ற தலைப்பிலும்,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் நவீன வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் நாகூர்கனி, சமூக சீர்திருத்தத்தின் அடையாளம் பெரியார் என்ற தலைப்பில் பேசினார்கள். .
வணிகநிர்வாகவியல் துறைத்தலைவர், இணைப்பேராசிரியர் சரவணாதேவி, கீர்த்தி, ரகுபதி, ரமேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
முதுகலை மாணவர்கள் கருத்தரங்கில் பங்குபெற்றனர். நாமக்கல் ஈரோடு சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வந்திருந்தனர். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu