மகளிர் உரிமை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் தேர்வு: தன்னார்வலர் களுக்கு பயிற்சி

மகளிர் உரிமை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் தேர்வு: தன்னார்வலர் களுக்கு   பயிற்சி
X

குமாரபாளையம் தனியார் கல்லூரியில் மகளிர் உரிமை தொகை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. 

இதில் குமாரபாளையம், பள்ளிப் பாளையத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்

குமாரபாளையத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகளை ஆய்வு செய்வதற்கான பணியில் ஈடுபடவுள்ள தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மாவட்ட வாரியாக இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணியில் முழுமையாக ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான பயிற்சி முகாம் குமாரபாளையம் தனியார் கல்லூரியில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடந்தது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் இதற்கான பயிற்சி வழங்கினர். இதில் குமாரபாளையம், பள்ளிபாளையத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

மாதம் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயலாக்கம் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



Tags

Next Story
ai in future agriculture