குமாரபாளையத்தில் தா.பாண்டியனுக்கு இரண்டாமாண்டு நினைவஞ்சலி
குமாரபாளையம் அருகே சத்யா நகர் கிளை சார்பில் சி.பி.ஐ. கட்சி மூத்த நிர்வாகி தா.பாண்டியனுக்கு இரண்டாமாண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி த.பாண்டியனின் இரண்டாமாண்டு நினைவு நாளையொட்டி, குமாரபாளையம் அருகே சத்யா நகர் பகுதியில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதே போல் நகர செயலர் கணேஷ்குமார் தலைமையில், குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையிலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
சி.பி.ஐ. தா. பாண்டியம் குறித்து மூத்த நிர்வாகிகள் கூறுகையில், தா. பாண்டியன் இந்திய இடதுசாரி அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளரும் ஆவார். இவர் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். இவர் 1989, 1991 தேர்தல்களில் வடசென்னைத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு - இந்திய ஐக்கிய பொதுவுடைமைக் கட்சிக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.
பாண்டியன் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கீழவெள்ளைமலைப்பட்டி என்ற ஊரில் தாவீது - நவமணி ஆகியோருக்கு நான்காவது மகனாக 1932 மே 18 இல் பிறந்தார். பாண்டியனின் பெற்றோர் கிறித்தவ மிசனரிப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். பாண்டியன் காமக்காபட்டி கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளி, உசிலம்பட்டி போர்டு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்றார். இவர் ஆங்கில முதுகலை படிக்க காரைக்குடி, அழகப்பா கல்லூரியில் சேர்ந்தார்.அங்கு இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மாணவர் பெருமன்றம் சார்பில் போட்டியிட்டு மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆங்கில முதுகலைப் பட்டமும் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.
இவர் தன் கல்வியை முடித்ததும், காரைக்குடி, அழகப்பச் செட்டியார் கல்லூரியில் விரிவுரையளராகப் பணியாற்றினார். இவர் 1957 சட்டமன்றத் தேர்தலில் புனைபெயரில் பரப்புரை மேற்கொண்டார். என்றாலும், இவரது பெயர் சில செய்தித் தாள்களில் வெளியாகவே இவர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இருந்தபோதும் கல்லூரி நிறுவனர் இவருக்கு ஊக்கமூட்டிக் கார்ல்மார்க்சு, ஏங்கல்சு நூல்களை வாங்கிப் பரிசளித்துள்ளார்.
இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்வதற்கு முன்பாக, பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ப. ஜீவானந்தம் தொடங்கிய தமிழ் நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் முதல் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். இவர் இந்திய பொதுவுடைமிக் க்ட்சியில் இருந்து விலகி மொகித்சென் தொடங்கிய ஐக்கிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சி சார்பாக இருமுறை வடசென்னை மக்களவைத் தொகுதியில் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளரானார். இவர் இந்திய இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.
களப் பொது மக்களுக்கு அன்றைய இந்திய முதன்மை அமைச்சரான ராஜீவ் காந்தியின் உரையை மொழிபெயர்க்க அவரோடு சென்றபோது, ராஜீவ் காந்தி தற்கொலைக் குண்டுத் தாக்குதலால் கொலைசெய்யப்பட்டபோது 1991, மே 21 ஆம் நாளன்று மேடையில் உடனிருந்த பாண்டியன் கடுமையாகக் காயமடைந்தார். இவர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தை எதிர்த்தாலும், இலங்கைத் தமிழரின் பிரச்சினைக்கு சிறீலங்கா அரசு பின்பற்றும் வன்முறையான அணுகுமுறையைக் கண்டித்து அதற்கு அமைதியான அணுகுமுறையில் தீர்வைக் காணுமாறு அறைகூவல் விடுத்தார். இந்நிகழ்வுக்குப் பிறகு பேசும்போது ஒருமுறை இன்னமும் அவரது உடலில் குண்டுச் சில்லுகள் புதைந்திருப்பதை நினைவுகூர்ந்து குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu