குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்: தலா 25 ஆயிரம் அபராதம்

குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்: தலா 25 ஆயிரம் அபராதம்
X

குமாரபாளையத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலரால், புகையிலை பொருட்கள் விற்றதாக 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலரால், புகையிலை பொருட்கள் விற்றதாக 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, தலா 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலரால், புகையிலை பொருட்கள் விற்றதாக 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, தலா 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் பல கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்து, குமாரபாளையம் போலீசார், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரங்கநாதன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அம்மன் நகர் பகுதியில் உள்ள பழனிச்சாமி, 55, மளிகைக்கடையிலும், காளியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீதர், 35, மளிகை கடையிலும் புகையிலை பொருட்கள் விற்பது செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டு, சீல் வைக்கப்பட்டதுடன், இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதேபோல் நகரில் எந்தெந்த பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது என போலீசார், மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!