அரசு பள்ளிகளில் ஆண்டுவிழா கோலாகலம்

அரசு பள்ளிகளில் ஆண்டுவிழா கோலாகலம்
X

படவிளக்கம் :

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆண்டுவிழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் அரசு பள்ளிகளில் ஆண்டுவிழா கோலாகலமாக நடந்தது.

அரசு பள்ளிகளில் ஆண்டுவிழா கோலாகலம்

குமாரபாளையம் அரசு பள்ளிகளில் ஆண்டுவிழா கோலாகலமாக நடந்தது.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 71ஆவது ஆண்டு விழா தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக குமாரபாளையம் தெற்கு நகர தி.மு.க. செயலாளர் ஞானசேகரன், மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி பி.டி.ஏ. தலைவர் ரவி பங்கேற்று, பேச்சு, கட்டுரை, ஓவியம், கையெழுத்து, பாட்டு, கவிதை, மாறுவேடம், தனிநபர் மற்றும் குழு நடனம், நாடகம், பாவனை நடிப்பு, வில்லுப்பாட்டு, கும்மி பாட்டு, இசைக்கருவிகள் வாசித்தல், உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கினர். உதவி தலைமை ஆசிரியர் அங்கப்பராஜ், என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி, கவிராஜ், சிவகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இதே போல், குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடந்த ஆண்டுவிழாவில், தலைமை ஆசிரியை கற்பகம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) கனகராஜ் பேசியதாவது:

தொடக்க கல்வி மாணவர்களாகிய நீங்கள் கல்வி, கலை, கலச்சாரம், விளையாட்டு என பல்வேறுதுறைகளில் சிறந்து விளங்கி பள்ளிக்கும் உங்களது பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் கிடைக்கும் நன்மைகளை மட்டும் மனதில் ஏற்றுக்கொண்டு நல்லொழுக்கத்தடனும் பண்புடனும் வளர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆசிரிய பயிற்றுனர் கணேஷ்குமார் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் லதா, பி.டி.ஏ. தலைவர் சீனிவாசன், சன்ரைஸ் அகடமி பூங்கொடி, செந்தில், தளிர்விடும் பாரதம் சீனிவாசன், ஆசிரியைகள் சரிதா, ரதிதேவி, ஸ்டெல்லா அருள்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!