குமாரபாளையம் பள்ளி,கல்லூரி பகுதி கடைகளில் புகையிலை பொருள் விற்பனை ஜோர்

குமாரபாளையம் பள்ளி,கல்லூரி பகுதி கடைகளில் புகையிலை பொருள் விற்பனை ஜோர்
X

குமார பாளையம் காவல் நிலையம் (பைல் படம்).

குமாரபாளையத்தில் அரசு மற்றும் அரசு, தனியார் பள்ளி, கல்லூரி பகுதி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

அரசு மற்றும் தனியார் பள்ளி,கல்லூரி மாணவர்களை குறி வைத்து சமூக விரோதிகள் அந்தந்த பகுதி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய கொடுத்து ஆதாயம் தேடி வருகிறார்கள். இதனால் மாணவர்கள் உடல்நிலை, எதிர்காலம் வீணாகும் அபயம் ஏற்பட்டுள்ளது. குமாரபாளையம் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு தினமும் ஓரிரு வழக்குப்பதிவு செய்து சில நபர்களை கைது செய்தும் வருகிறார்கள். ஆனால் இதற்காக மர்ம கும்பல் ஒன்று தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Tags

Next Story
ai marketing future