குமாரபாளையத்தில் குட்கா பொருட்கள் விற்பனை: 5 கடைகளுக்கு சீல்

குமாரபாளையத்தில் குட்கா பொருட்கள் விற்பனை: 5 கடைகளுக்கு சீல்
X

குமாரபாளையத்தில் நகராட்சிக்குட்பட்ட 5 இடங்களில் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா விற்பனை செய்ததாக, 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு தலா 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு தலா 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கநாதன் மற்றும் குமாரபாளையம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஜான் ராஜா ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா விற்பனை செய்த, செல்வகுமார், 34, நெல்லை சரஸ்வதி மளிகை கடை பிராந்தர் காடு, மனோகரன், 36, ஜெயலட்சுமி மளிகை கடை நாராயணா நகர், மோகன்ராஜ், 27, பால விநாயகர் மளிகை, நாராயண நகர், முத்துலட்சுமி, 45, மாரியப்பன் பெட்டி கடை, அம்மன் நகர், தியாகராஜன், 48, லக்சனா மாவு கடை, சரஸ்வதி தியேட்டர் எதிரில், காந்திநகர், ஆகிய ஐந்து கடைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மேலும் ஒரு கடைக்கு தலா 25 ஆயிரம் வீதம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் அபதாரம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story