குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பனை: ஒருவர் கைது

குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பனை: ஒருவர் கைது
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பனை செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில், போலீசார் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

சரஸ்வதி தியேட்டர் ரோடு, பெராந்தர் காடு பகுதியில் போலி லாட்டரி விற்பனை நடப்பது தெரிய வந்தது. நேரில் சென்ற போலீசார், அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம், 26, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து மூன்று எண்கள் எழுதிய வெள்ளை தாள்கள் 5 எண்ணிக்கை பறிமுதல் செய்தனர்.

லாரி ஓட்டுநர் மீது மின்வாரிய அதிகாரி புகார்

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி, 28. லாரி ஓட்டுனர். குமாரபாளையம் ராஜராஜன் நகர் பகுதியில் மின் வாரியம் சார்பில், சாலையில் வெள்ளை கோடுகள் போட்டுக்கொண்டிருந்தனர். வெள்ளைக்கோடு போட பயன்படுத்திய லாரியை அஜாக்கிரதையாக ஓட்டிச்சென்று சாலையோரம் இருந்த தாழ்வழுத்த மின் மாற்றி மற்றும் மின் கம்பம் மீது மோதியதில் கம்பங்கள் சேதமானது. இதன் சேத மதிப்பு 3 லட்சம் ரூபாய் என மின்வாரிய இளமின் பொறியாளர் ஸ்ரீதர் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்து, திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் கொடுத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் லாரி ஓட்டுனர் திருப்பதியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !