பெண்களே, கவனமா இருங்க.. முகமூடி மனிதர் கொள்ளை முயற்சி

பெண்களே, கவனமா இருங்க..  முகமூடி மனிதர்  கொள்ளை முயற்சி
X
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள தெற்குபாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் முகமூடி கொள்ளையன் கத்தியை காட்டி நகைகளை கொள்ளை அடிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் முகமூடி கொள்ளையன் கத்தியை காட்டி நகைகளை கொள்ளை அடிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள தெற்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி விக்டோரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். ஆள் அரவமற்ற மாலை நேரத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து தனியாக இருந்த விக்டோரியாவிடம் கத்தியை காட்டி நகையை பறிக்க முயன்றான். பயந்துபோன விக்டோரியா கத்தினார். அவரது சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வந்தனர்.

அவர்கள் வருவதை பார்த்த அந்த மர்ம நபர், விக்டோரியாவை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டான். இதை தொடர்ந்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வெப்படை காவல் நிலைய போலீசார் காயமடைந்த விக்டோரியாவை சிகிச்சைகாக ஈரோட்டில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, நாமக்கலில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர்.மேலும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை போலீசார் சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொள்ளை முயற்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுவரை இது போன்ற சம்பவ நிகழ்ந்தது இல்லை என்று கூறும் பொதுமக்கள், போலீசார் ரோந்து பணியை இப்பகுதியில் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Tags

Next Story
ai marketing future