குமாரபாளையம், ஆனங்கூர் சாலையில் தார் சாலை பணி நடப்பதால் அடைப்பு

குமாரபாளையம் ஆனங்கூர் சாலையில் தார் சாலை பணி நடைபெறுவதால் சாலை அடைக்கப்பட்டது.

குமாரபாளையம்:

தார் போடும் பணிகள் நடக்கிறது.

குமாரபாளையம் ஆனங்கூர் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல அவதிப்பட்டு வந்தனர். இங்கு புதிய தார் சாலை அமைக்க பல வருடமாக பல தரப்பினரும் கோரிக்கை வைத்ததால் இங்கு நேற்று புதிய தார் சாலை அமைக்கும் பணி துவங்கியது. இதனால் ஆனங்கூர் சாலை சேலம் சாலை நுழைவுப்பகுதியில் மற்றும் சேலம் கோவை புறவழிச்சாலை சர்வீஸ் சாலை கோட்டைமேடு பிரிவு ஆகிய பகுதிகளிலும் பாதைகள் அடைக்கப்பட்டன.

Tags

Next Story