டூவீலர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஒருவர் பலி: இன்னொருவர் காயம்

டூவீலர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில்   ஒருவர் பலி: இன்னொருவர் காயம்
X
குமாரபாளையம் அருகே, டூவீலர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், ஒருவர் பலியானார்; மற்றொருவர் படுகாயமடைந்தார்.

குமாரபாளையம், எதிர்மேடு டீச்சர்ஸ் காலனி பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார், 27. விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர். இவரும், இவரது நண்பரான ஓட்டல் கடை நடத்தி வரும் சதீஸ், 25, இருவரும் டூவீலரில் சென்றனர். செந்தில்குமார் வண்டியை ஓட்ட, சதீஸை பின்னால் உட்கார வைத்துக்கொண்டார்

சேலம் - கோவை புறவழிச்சாலை, நேரு நகரில் உள்ள தனது விசைத்தறி தொழிற்கூடம் சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மழை பெய்ததால், வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வண்டியை ஓட்டியுள்ளனர். இதில், டூவீலர் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் செந்தில்குமாருக்கு தலையில் பலத்த அடிபட்டது. இவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். பலத்த அடிபட்டு சேலத்தில் சதீஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்