குமாரபாளையத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

குமாரபாளையத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

குமாரபாளையத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

குமாரபாளையத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் போலீசார் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு நிகழ்வு இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் நடைபெற்றது. காவல் நிலையம் முன்பு, பள்ளிபாளையம் பிரிவு சாலை, ஆனங்கூர் பிரிவு சாலை, காவேரி நகர் பஸ் நிறுத்தம், ராஜம் தியேட்டர் அருகில், கத்தேரி பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.

இதுகுறித்து எஸ்.ஐ. நடராஜ் பேசுகையில், தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு வாரம் அக். 17 முதல் அக். 26 வரை கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதில் பொதுமக்கள் இந்த சட்டம் குறித்த தங்கள் சந்தேகங்களை போலீசார் வசம் கேட்டு அறிந்து கொள்ளலாம். இவ்வறு அவர் பேசினார்.

இந்த விழிப்புணர்வு சட்டம் குறித்த வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. இதில் எஸ்.ஐ. தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.க்கள் குணசேகரன், மாதேஸ்வரன், பழனிசாமி, ராம்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!