குமாரபாளயைத்தில் பேருந்து நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட பேருந்துகள்

குமாரபாளயைத்தில் பேருந்து நிலையத்திற்கு திருப்பி   அனுப்பப்பட்ட பேருந்துகள்
X

குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் பொதுமக்கள் எதிர்ப்பையடுத்து பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்கு திரும்பி சென்றன.

குமாரபாளையம் பேருந்து நிலையத்திற்கு வராத அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பொதுமக்கள் எதிர்ப்பால் திருப்பி அனுப்பப்பட்டன.

குமாரபாளையம் பேருந்து நிலையத்திற்கு சேலத்தில் இருந்து பவானி செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் சங்ககிரியில் இருந்து பவானி செல்லும் பேருந்துகள் குமாரபாளையம் பேருந்து நிலையத்திற்குள் வராமல் பள்ளிபாளையம் பிரிவு சாலையிலேயே முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பயணிகளை இறக்கி விடுகின்றனர்.

இதனால் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது பலமுறை அரசு மற்றும் தனியார் பேருந்துகளை எச்சரித்தும், தொடர்ந்து குமாரபாளையம் பஸ் ஸ்டான்டிற்குள் வராமல் பள்ளிபாளையம் பிரிவு சாலையிலேயே இறக்கி விடுகின்றனர்‌. சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக நேற்று பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விட்டனர்.

அனைத்து பேருந்துகளும் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு வருவதற்கு அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் சிரமங்களை குறைக்க போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உதவுமாறு பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture