குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வாட்ச்மேன் நியமிக்க கோரிக்கை

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வாட்ச்மேன் நியமிக்க கோரிக்கை
X

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாட்ச்மேன் நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாட்ச்மேன் நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து முன்னாள் மாணவர்கள் கூறியதாவது:-

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது நகரில் பெரும் தொழிலதிபர்களாகவும், அரசியல்வாதிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், மருத்துவர்களாகவும் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட பள்ளி இப்போது சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்து வருவது வேதனையை தருவதாக உள்ளது. சில நாட்கள் முன்பு பள்ளியில் படிக்கும் இரு தரப்பினரிடையே பள்ளி வளாகத்தில் தொடங்கி, பள்ளி சாலையின் முடிவில் இருக்கும் பாறையூர் பகுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிகொண்ட சம்பவமும் நடந்ததாக தெரியவருகிறது. என்.சி.சி. பயிற்சிக்காக மாணவர்கள் அதிகாலை வரும்போது, என்.சி.சி. அலுவலர் அறை அருகே இருக்கைகள் போடப்பட்டு, காலி மது பாட்டில்கள் இருந்ததும், சிகரெட் துண்டுகள் கிடந்ததும் பார்த்துள்ளனர். தற்போது நேற்றுமுன்தினம் செயல்படாத வகுப்பறையில் பகலில் சிலர் இருப்பதை கண்ட ஆசிரியர்கள், ஒருவன் தப்பித்து ஓட, மற்றவர்களை பிடித்து வைத்து, போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர். நேரில் சென்ற போலீசார் அவர்களிடம் விசாரித்ததில் போதை வஸ்துகள் உண்டதும், விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி கூறும்போது: பள்ளி வளாகத்தில் சமீபத்தில் படித்து வெளியேறிய மாணவர்கள் உள்ளிட்ட பலர் பள்ளி வளாகத்தில் இருந்து போதை வஸ்துகள் உண்டுள்ளனர். விசாரித்ததில், விற்பனைக்காக வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த போதை வஸ்துக்கள் யார் வினியோகம் செய்து வருகிறார்கள் என்பது குறித்து அவர்களிடம் விசாரணை செய்து வருகிறோம் என்றார்.

பள்ளி வளாகத்தில் வாட்ச்மேன் நியமிக்கப்பட்டு தினமும் இரவிலும், விடுமுறை நாட்களில் இரவு மற்றும் பகலிலும் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!