பயணிகள் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை

குமாரபாளையத்தில் ராஜம் தியேட்டர் பஸ் நிறுத்தம் பயணியர் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை
குமாரபாளையத்தில் பயணியர் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை
குமாரபாளையம் நகராட்சி பேருந்து நிறுத்தங்களில் பயணியர் நிழற்கூடம் இல்லாததால், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாணவ மாணவிகள் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்கும் அவலம் ஏற்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி பள்ளிப்பாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு,ராஜம் தியேட்டர் ஆகிய இடங்களில் பயணியர் நிழற்கூடமும், அமர்வதற்கு இருக்கைகளும் அமைத்துக் கொடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு வழங்கப்பட்டது.
விபத்து ஏற்படுத்தும் மரம் அகற்றப்படுமா ?
குமாரபாளையம் நகராட்சி 14வது வார்டு பேருந்து நிலையம் எதிரில் காட்டூர் விட்டலபுரி ராமர் கோவில் மண்டபத்திற்கு செல்லும் வழியில் மரம் ஒன்று விபத்து ஏற்படுத்தும் நிலையில் சாய்ந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த சாலையில் நடந்து சென்றால் கூட தலையில் அடிபடும் அளவிற்கு உள்ளது.
இரவு நேரங்களில் அந்த சாலையில் வயதானவர்கள் வரும்போது மரம் தாழ்வாக இருப்பது தெரியாமல் மரத்தில் மோதி விடுகிறார்கள். வாகன ஓட்டிகள் பலரும் இதில் மோதி காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட், தினசரி காய்கறி மார்க்கெட் ஆகியன உள்ள இந்த பகுதியில் இந்த வழியாக காய்கறி வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் அதிக தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.
மேலும் விசைத்தறி, கைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் உள்ளது. இங்கு நூல்கள் கொண்டு செல்லவும், உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்களை எடுத்து செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற ராமர் கோவில், பாண்டுரங்கர் கோவில் ஆகியன இந்த பகுதியில் உள்ளது.
பல ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள், இந்த கோவிலுக்கு வாகனங்களில் வரும் போது மிகவும் சிரமம் ஏற்படுகிறது. பக்தர்கள் சிரமம் போக்க, மற்றும் அனைத்து தரப்பினர் துன்பம் போக்கவும், இந்த மரத்தை அகற்ற மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில், அமைப்பாளர் சித்ரா, நிர்வாகிகள் மல்லிகா, விமலா, உள்ளிட்ட பலர் குமாரபாளையம் நகராட்சி ஆணையர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu