குமாரபாளையத்தில் பழுதான ஆட்டோக்கள் நிறுத்த மாற்று இடம் : மக்கள் கோரிக்கை

குமாரபாளையத்தில் பழுதான ஆட்டோக்கள் நிறுத்த மாற்று இடம் : மக்கள் கோரிக்கை
X

குமாரபாளையம் சேலம் சாலையில் ராஜம் தியேட்டர் அடுத்த பாலத்தின் மீது பழுதான ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

குமாரபாளையம், ராஜம் தியேட்டர் பகுதி பாலத்தில் பழுதான ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

குமாரபாளையம்:

குமாரபாளையம் சேலம் சாலையில் ராஜம் தியேட்டர் அடுத்த பாலத்தின் மீது பழுதான ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கபட்டுள்ளன.

இந்த பாலம் மிக குறுகியதாக இருந்தது. இதனால் பஸ், லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்கள் செல்ல போதுமான இடவசதி இல்லாமல் இருந்ததால் இது அகலப்படுத்தப்பட்டது. இந்த பாலம் அருகில் லேத் பட்டறை இருப்பதால், அந்த லேத் நிறுவன உரிமையாளர் ஆட்டோக்களை பாலத்தின் மீது வரிசையாக நிறுத்தியுள்ளார்.

இதனால் பாலத்தின் அகலம் மீண்டும் குறுகியதாக மாறிபோய் உள்ளது. ஆகவே அனைத்து ரக வாகனங்களும் எளிதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளன. ஆகவே, ஆட்டோக்கள் நிறுத்த மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

Tags

Next Story
ai healthcare technology